தீபாவளிக்கு ஒரு வாரம் முன்னால் பங்களூரிலிருந்து பவானி போக இர பத்து மணிக்குக் கிளம்பிய ஆமினி பஸ்ஸில் ரஞ்சனி ஏறியதும் பஸ் புறப்பட்டது ஐம்பது வயதான ஒரு பெரியவர் பக்கத்தில் இருந்த காலி சீட்டில் அவள் உட்கார்ந்தாள்.அந்த சீட் இருவர் உட்காரப் போதவில்லை.ஆகவே அவரை அண்டி கொஞ்சம் நெருக்கமாகவே அவள் உட்கார வேண்டி இருந்தது. அவள் குட்டை குர்த்தியும் லூசான சல்வாரும் போட்டுக் கொண்டிருந்தாள்.அவர் வேட்டியும் முக்கால் கை சட்டையும் தோளில் சால்வையும் அணிந்திருந்தார்.குளிர் காற்று அடித்தது அவளுக்கு நடுக்கியது. குளுருதா அம்மணி போர்த்திக்க என்று பெரியவர் தன் சால்வையின் ஒரு பகுதியை அவளுக்குப் போர்த்தினார். இதமாக இருந்தது. வேர்வை நெடியடித்த அந்தக் கம்பளிச் சால்வையை இழுத்து மூடிக் கொண்டு தேங்ஸ் அங்கிள் என்று சொல்லி இன்னமும் நெருங்கி காலைத் தூக்கி சீட்டில் வைத்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டவள் அப்படியே தூங்கிவிட்டாள். திடீரென்று பஸ் அதிர்ந்து குலுங்க அவளுக்கு தூக்கம் கலைந்த போது தான் பெரியவர் தொடையில் அவள் தலையை வைத்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருப்பது அவளுக்குத் தெரிந்தது.