அப்பா அம்மா இருவரும் ஆசிரியர்களாக இருந்தாலும் என்னை டாக்டராக்க ஆசை பட்டார்கள். அந்த ஆசையை, ஆர்வத்தை சின்ன வயதில் இருந்தே ஊட்ட தொடங்கினார்கள். காரணம் என் அப்பாவின் தங்கை அத்தையும், மாமாவும் டாக்டர்கள். அவர்கள் பிஸியாகவும், வசதியாகவும், சமூகத்தில் பெரிய மரியாதையோடு இருப்பதை அடிக்கடி சுட்டி காட்டி எனக்குள் டாக்டர் கனவை விதைத்தார்கள்.