பள்ளி கல்லூரி காலங்களை சிலர் மறக்கமுடியா வசந்த காலம் என்பார்கள்.
சிலர் ஞாபகம் வருதே…ஞாபகம் வருதே என்று பாடல் பாடி பழைய நினைவுகளில் மூழ்கி
நிகழ் கணத்தை மறந்தே விடுவார்கள். சிலர் எனக்கு மட்டும் காலத்தை மாற்றும்
சக்தி கிடைச்சா ஸ்கூல் காலேஜ் லைஃபே போதும்துனு இருந்திடுவேன். இன்னும்
டெக்கீஸ் லெவல் ஆன்ட்ராய்ட் ஆந்தைகள் டைம் மெஷின்ல ஏற் ஸ்கூல் காலேஜ்
டைஸுக்கு திரும்ப திரும்ப போயிட்டு வரணும் போல இருக்கு என்று புலம்பி
கொண்டிருப்பார்கள். ஆக அனைவருக்கும் அந்த பருவ காலத்தின் மேல் என்ன பற்றோ
பக்தியோ ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது.