ரயில் பயணத்தில் கிடைத்த புது அனுபவம்!!

என் கல்லூரி நான் இருக்கும் மாநிலத்திலிருந்து வேரு ஒரு மாநிலத்தில் இருப்பதால் நான் விடுமுறை நாட்களில் மட்டுமே என் வீட்டிற்க்கு வருவதுண்டு. அப்படி ஒரு நாள் நான் என் கல்லூரி விடுமுறைக்காக வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். தொடர்வண்டியில் (ட்ரைன்) பயணம் என்பதால் எனக்கு அவ்வளவு கஷ்டம் தொன்றியதில்லை. ஆனால் இம்முறை எனக்கு உட்கார்ந்து செல்லும் அளவிற்க்கு டிக்கெட் கிடைக்கவில்லை. நான் நின்று கொண்டே செல்ல வேண்டியதாயிற்று. விடுமுறை காலம் என்பதால் தொடர்வண்டியில் கூட்டம் அதிகமாகவே இருந்தது.