நானும் என் கொழுந்தனாரும் அவர் கிராமத்தில் செட்டில் ஆனோம். வெளி மாநிலத்தில் என் கணவர் ஒரு விபத்தில் இறந்து விட, கைக் குழந்தையோடு நான் அனாதை ஆனேன். அப்போது எதிர்காலம் என்னை மிரட்டிக் கொண்டு இருந்த போது ஆதரவுக் கரம் நீட்டி என்னை கிராமத்துக்கு கூட்டி வந்தவர் தான் என் கொழுந்தனார். எனக்கு அம்மா மட்டும் தான் அவளும் நகரத்தில் அக்காவோடு ஒட்டிக் கொண்டு அந்த சின்ன கூட்டில் வாழ்ந்து கொண்டு இருந்தாள். அப்போதைக்கும் அவர்கள் எனக்கு ஆறுதல் தான் சொல்ல முடியும். அதை தாண்டி அவர்களிடம் எதையும் எதிர்பார்க்க முடியாது.