என்னுடைய பொருளாதார நிலைமை நன்றாகவே இருந்தது. ஆனால் அது எனக்கு போதுமானதாக இல்லை. பெரிய உயர்தட்டு மக்களை போல ரிச்சாக இருக்க வேண்டுமென நினைப்பேன். என் கவர்மென்ட் உத்தியோகத்தில் எனக்கு நிரந்தர வருமானம் உள்ளது. ஆனால் அதுமட்டும் எனக்கு போதுமானதாக இல்லை. ஆனால் என் மனைவி எங்களுக்கு இருக்கும் சின்ன ப்ளாட், ஒரு மாருதி கார், நான் அவளுக்காக வாங்கிக் கொடுத்த நகைகள்…. இதுவே போதுமென்று மகிழ்ச்சியாக இருந்தாள்.