ஏங்கிய என் ஏக்கம் தீர வெறி!

இவை வெறும் வார்த்தைகளல்ல என் வாழ்க்கை. நான் வாசித்துவிட்டேன் நீங்களும் வாசிக்காதீர்கள் வாழ்ந்துபாருங்கள்.
அன்பு நண்பர்களே அருமை வாசகர்களே இது என் வாழ்வின் சம்பவம் முடிந்த வரை
ஸ்வாரஸ்யமாய் சமர்பிக்கிறேன். உண்மை சில இடங்களில் கசப்பாக தான் இருக்கும்
ஆதரவளிங்கள். ஆரம்பத்தில இருந்தே எனக்கு காக்கிச்சட்டை மீது காரணம் தெரியாத
காழ்புணர்ச்சியும் வெறுப்பும் இருந்தது. அப்படி தான் அந்த
அகிம்சைவாதியையும் காக்சிச்சட்டைக்குள் கண்டதால் ஆரம்பத்தில் மோதலாகி
போனது. ஆனால் மோதல் தான் காதலுக்கு அடிதளம் என அவனை ஆரம்பத்தில் வெறுத்து
தான் தெரிந்துக்கொண்டேன்.