ஏழு சுவரங்களை எப்போதும் தியானிக்கும் இசை குடும்பத்தில் பிறந்தாலும் எனக்கும் என் அப்பாவுக்கும் என்றுமே ஏழாம் பொருத்தம் தான். அப்பா ஊரில் பிரபலமான பாட்டு வாத்தியார். கோவில்களில் மட்டுமே இலவசமாக இசை கச்சேரி நடத்துவார். மற்றபடி யார் வெளியே பணம் கொடுத்தாலும் மேடைகளிலோ அல்லது மண்டபகங்களிலோ பாடமாட்டார். அதை போல் சினிமாவில் பாடுவதையும் விரும்பமாட்டார்.