என்னுடைய கிராமத்தில் இருந்து படப்பைக்கு சைக்கிளில் சென்று அங்கிருந்து பஸ் பிடித்து தாம்பரம் சென்று என்னுடைய சீனியர் அட்வகேட் ஆபீசுக்கு போக வேண்டி அவசரம் அவசரமாக படப்பைக்கு சைக்கிளில் சென்றுக் கொண்டு இருந்ததால் எதிரே வந்த காரை பார்க்கவில்லை. கார் அதிவேகமாக வந்ததால் என்னை சிறிது உராயித்து விட்டு தன் பயணத்தை தொடர்ந்தது. நான் சிறிது தடுமாறி சைக்கிளில் இருந்து கீழே விழுந்து, எழுந்து காரில் யார் பயணிக்கிறார்கள் என்பதை பார்க்காமல் மீண்டும் என் சைக்கிள் பயணத்தை தொடர்ந்தேன். என்னை உராயித்து விட்டு சென்ற கார் சிறிது தூரம் சென்று நின்றது. அதில் இருந்தவர்கள் என்னைப் பார்த்து ஐய்யா வௌவால் பறக்குது என்று கிண்டல் அடித்த பெண் குரல் மட்டும் என் காதில் ஒலித்தது.