நான் ஒரு தனியார் வங்கியில் கடன் வசூலிக்கும் பிரிவில் பணிபுரிகிறேன். என்னோட வேலையே வங்கியில் இருந்து கொடுத்த வரா கடனை வசூலிப்பது தான். வரா கடன் என்று பேரிலேயே தெளிவாக தெரிந்து விடும். அந்த கடன் வரவே வராது என்று. ஆனால் வசூலிக்க வேண்டியது தான் எங்கள் துறையின் கடமை. இன்று பல வங்கிகள் தடுமாற்றத்திற்கு காரணமே இது போன்ற வரா கடன்கள் தான். வங்கியை பொருத்தவரை அரசு மற்றும் ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள வட்டியில் தான் கடன் தருகிறோம். கடன் தவணை தாண்டும்போது கூட ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள பைன் அல்லது பெனால்டி தொகையைத் தான் சேர்த்து வசூலிப்போம்.