ராஜேஷ் எப்படி இருக்கே ரொம்ப நாளா போன் கூட பண்ணலே இன்னும் தூக்கத்தில்
இருந்து கூட எழுந்து இருக்காத நேரத்தில் குரலில் இருந்தே பேசுவது வசந்த்
என்று தெரிந்து நான் ஹே உனக்கு என்ன பைத்தியமா மணி என்ன ஆச்சு இந்த
நேரத்திலே கால் செய்யறே என்று சொல்ல ராஜேஷ் யாருக்கு பைத்தியம் மணி இப்போ
பத்து என்று சொன்னதும் தான் மணியை கவனித்தேன் ராஜேஷ் சொன்னது போல மணி பத்து
தான் இருந்தாலும் ஞாயிற்று கிழமை எப்போவுமே பதினோரு மணிக்கு முன்னே
எழுந்து பழக்கம் இல்லாதவன். இருந்தாலும் பேசுவது ஒரு காலத்தில் என்
நெருங்கிய நண்பன் ரெண்டு பேரும் சேர்ந்து எல்லா அட்டகாசங்களும் செய்து
இருக்கிறோம். இப்போ கொஞ்ச நாளா கொஞ்சம் நல்ல பையனா இருக்கிற முடிவில் பழைய
தொடர்புகள் பல வற்றை நிறுத்தி வைத்து இருந்தேன். தூக்கம் கலைந்து விட்டது
சரி பேசுவோம் என்று சொல்லுடா என்று பேச்சை தொடர்ந்தேன்.