மணி 12. 30 பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு பைக்யில் வேகமாக வந்து கொண்டு இருந்தேன். அடர்ந்த காடு கனரக வாகனங்களும் பஸ்களும் சாலையில் காற்றை கிழித்துக்கொண்டு பறந்து கொண்டு இருந்தது. நான் ஒரு சிகரெட்யை பற்றவைத்து கொண்டு தம் அடித்து கொண்டு பைக்யில் வந்து கொண்டு இருதேன். தூரத்தில் யாரோ லிப்ட் கேட்பதற்காக கையை அசைத்தார் நான் வேகத்தை குறைத்து அவரிடம் பைக்கை நிறுத்தினேன்.