இரவு பத்து மணி. துளசி படு சுவாரசியமாக தன்னையே மறந்து தொலைகாட்சியைக்
கண்டு கொண்டிருந்தாள். விஜய் டிவியில் ‘நீயா நானா’ கோபிநாத் ‘நடந்தது
என்ன?’ ப்ரோக்ராமில் நமது நகரங்களில் நடக்கும் அட்டூழியங்களைக் குறித்து
பிட்டு பிட்டு வைத்துக் கொண்டிருந்தார். இரவு ஒன்பது மணிக்கு மேல் தனியாக
இருக்கும் பெண்கள் வயதானவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று
கோபிநாத் உபதேசித்து விட்டு, பின்னர் காமெரா சமீபத்தில் நடந்த சில
சம்பவங்களை ‘சித்தரித்து’க் காண்பிக்கத் தொடங்கியது.