சோபியாவுக்கு இன்னைக்கு பூராவும் கார்ல பிரயாணம் பன்னிக்கிட்டு இருக்கறாப்ல இருந்தது. அவளோட 18வது பிறந்தநாளை குடும்பத்தோட சிறப்பா கொண்டாடனும்னுட்டு சொல்லிட்டார் அவங்கப்பா. அதுக்காக நல்லநாளும் அதுவுமா காலையில 8 மணிக்கு கிளம்பி இப்ப 11 மணிவரைக்கும் கார்லயே சுத்திட்டு இருந்தா போரடிக்காதா? அவங்க குடும்பத்தில எந்தப் பெண்ணுக்கு 18 வது பிறந்தநாளுன்னாலும் விஷேசம் அவங்க கிராமத்து பண்ணை வீட்டிலதான். அதுக்குத்தான் இப்ப போயிட்டு இருக்காங்க. சோபியாவுக்கு அங்க என்ன மாதிரி கொண்டாட்டம் இருக்கும்னு ஒன்னும் ஐடியா இல்ல. அதுவும் காருக்குள்ள யாரும் எதும் பேசாம அமைதியா இருந்தது மட்டுமில்ல அண்ணன் சுரெஷம் அக்கா ராணியும் அவள வினோதமா பார்க்கறாப்ல இருந்தது.