தங்கம் வீடுகளுக்கு வீடு சென்று வேலை செய்யும் வேலைக்காரி. பெயருக்கு ஏற்றது போல குணத்திலும் தங்கமவள். அந்த கால நடிகை பானுப்பிரியா மாதிரி. அளவாக பிரம்மன் செதுக்கிய சிலை. அவள் கணவன் பண்ணையாரின் தேட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தான். அவனை மூன்று மாதத்திற்கு முன்பு ரத்தவெள்ளத்தில் இறந்துக் கிடந்தவனை தூக்கிவந்தனர். அவனை கருப்பு அடித்து விட்டதாக ஊருக்குள் கூறுகின்றனர். தங்கத்தின் மீது ஆசைக் கொண்ட பண்ணையார் கூட அதனை செய்திருக்கலாம்.