தென்கோடியிலிருந்து தலைநகர் சென்னையில் வேலை பார்த்து வருகிறேன். திருமண வயதை நெருங்கிவிட்டாலும் சென்னையில் பேச்சிலர் வாழ்க்கை தந்த சுகத்தில் பொறுப்பை சுமக்க விருப்பமில்லா மாதச் சம்பள சோம்பேறிகளாக சுற்றிகொண்டிருக்கும் பலரில் நானும் ஒருவன். பட்டணத்தில் காசும் நேரமும் தான் வேண்டும் என்பார்கள். பிளாட்பாரத்திலிருந்து பைஃவ் ஸ்டார் ஓட்டல் வரை அனைத்து ரக வாழ்க்கையும் சென்னையில் சாத்தியம்.