எனக்கு மேரேஜ் முடிந்த உடனே அமெரிக்காவில் ஆன் சைட் வாய்ப்பு வந்த போது அந்த அரிய வாய்ப்பை மறுக்க முடியாமல் ஏற்று கொண்டேன். திருமணம் முடிந்து புது மனைவியை விட்டு விட்டு அமெரிக்காவுக்கு புறப்பட்டேன். திருமணத்திற்கு முன்பு நான் அப்படி பல முறை வெளிநாட்டு அலுவலக பயணத்திற்கு ஏங்கினாலும் நான் ஜூனியர் என்பதால் அப்போது அந்த சான்ஸ் எனக்கு கிடைக்க வில்லை. திருமணத்திற்கு முன்பு சென்ற என் சக நண்பர்கள் பலர் ஜாலியாக ஆன் சைட் யில் சம்பாதித்த பணத்தை செலவு செய்து திரும்பியதை பல முறை பார்த்து இருக்கிறேன்.