அந்த குளிரூட்டப்பட்ட அறையிலும் நிஷாவின் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. அந்த சம்பவம் திரும்பத்திரும்ப ஆக்ஷன் ரீப்ளே போல் அவள் மனத்திரையில் ஓடியது. கடந்த இரண்டு வருடமாய் தன் நிம்மதியை கெடுத்த அந்த சம்பவம்.தலைநகருக்கு மாற்றலாகி வந்ததில் மாதவனை விட நிஷாதான் பெரிய நிம்மதியடைந்தாள்..