நாட்டு சரக்கு சும்மா நச்சுன்னு இருக்கு!

நான் பஞ்சவர்ணம் (‘பஞ்சு’ ‘பஞ்ச்’). ப்ளஸ்2 -ல ஃபெயில் ஆயிட்டு ஒரு ட்யுடோரியல் காலேஜ்ல படிக்கிறேன். எங்க மாமா ஒருத்தர் ஒரு எலெக்ட்ரிகல் & எலெக் ட்ரானிக் சர்விஸ் கம்பனி நடத்தறார். லீவு நாள்ல அவர் கிட்ட இதல்லாம் கொஞ்சம் கத்துக்கிட்டேன். அதனால எங்க பேட்டையில காலேஜ் ஸ்டூடன்ட்ஸ் சேர்ந்து ‘மஜா லைட் ம்யூசிக் பேண்ட்’ (majaa light music Band) தொடங்கினபோது நான் லைட் & சவுண்ட் ஸிஸ்டத்துக்கு சார்ஜ் எடுத்துக்கிட்டேன். எப்ப எங்க நிகழ்ச்சி நடந்தாலும் நான் மேடைமுன்னால, கீழே ஒரு நாற்காலியில உக்காந்து ஒரு டெஸ்க்ல வச்சிருக்க கலர் லைட்டுகளையும் வெவ்வேற மைக்குகளையும் ஸ்பீக்கர்களையும் தேவைக்கு ஏத்தபடி அட்ஜஸ்ட் செய்வேன். மத்த எல்லார்க்கும்போல எனக்கும் ஒரு பங்கு.