அப்பப்பா இந்த சென்னையின் வாகன நெரிசல்களுக்கு மத்தியில் அலுவலகம் போவது ஒரு தனிக்கலை . நேரத்துக்குப் போகணும்கிற வெறி அதிகம் இருந்திட்டாச் சொல்லவே வேண்டியதில்லை . ஒருவாறு அலுவலகத்தை அடைந்த போது பத்து நிமிடம் தாமதமாயிட்டுது. எப்படி முயற்சித்தாலும் இத்தனைக்காலமும் அலுவலகத்துக்கு பத்து நிமிடம் முன்னாடி வரமுடியவில்லை. அசிஸ்டன்ட் மானேஜர் என்று சுட்டப்பட்ட சிறிய அறையுனுள் நுழைந்து இருக்கையில் அமர்ந்ததும் இன்டர்காம் அழைத்தது . அனேகமாக என்னை இன்டர்காமில் அழைப்பது எம். டியாகத்தானிருக்கும். குரலில் தானாக வந்துஒட்டிக்கொண்ட பவ்வியத்துடன் யெஸ்ஸினேன் . துஷ்யந்தன் கொஞ்சம் என் ரூமுக்கு வந்துட்டு போறீங்களா என்று கேட்டுவிட்டு என் ஓ .கே சாரை ஏத்துக்கொண்டு லைனை வெட்டினார் எனது எம் .டி. அடுத்த வினாடியே அவரது அறை நோக்கிப் போனேன் . கதவைத் தட்டிவிட்டு மே ஐ கம்மிங் என்ற என் விண்ணப்பத்துக்கு அனுமதி கிடைத்ததும் உள்ளே போனேன் . எம். டியின் உத்தரவுக்கமைய அவருக்கு எதிரே இருந்த கதிரையில் அம்ர்ந்தேன். “ஸீ மிஸ்டர் துஷ்யந்தன் . உங்களை அப்பாயிண்ட் பண்ணும்போதே சொன்னேன் .