சில வருடங்களுக்கு முன் நான் வழக்கம்போல் வார இறுதிநாட்கள் பார்ட்டிக்கு செல்லும் போது அறிமுகமானாள் அம்பிகா. எனது நெருங்கிய நண்பனின் உறவுக்கார பெண் தான். வாரந்தோறும் சந்தித்துக்கொள்ளும் வாய்ப்பு அமைந்தாலும் ஆரம்பத்தில் அதிகம் பேசிக்கொள்ளவில்லை. ஆனால் பார்வைகள் பழக்கத்தை விரைவில் ஏற்படுத்திக்கொள்ள செல், ஸ்கைப் மற்றும் மெயில் மூலம் தொடர்புகளை விரிவுபடுத்திக்கொண்டோம்.