அதிகாலை பொழுது. காகங்கள் போட்டி போட்டு சத்தமிட்டு கொண்டு இருந்தன. தூக்கம் கலைந்து எழுந்த நான் முதல் வேலையாக கடிகாரத்தைப் பார்த்தேன். மணி ஐந்து நாற்பத்தி ஐந்து.டெல்லியில் இருக்கும் போது இவ்வளவு சீக்கிரம் எழுந்ததே இல்லை. இரவு எல்லாம் நண்பர்களோடு ஊர் சுற்றி வீடு திரும்பவே மணி மூன்று ஆகி விடும். தினமும் கும்மாளம்தான். அதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகத்தான் அப்பா என்னை மெட்ராசுக்கு அனுப்பி விட்டார். மெட்ராஸ் எனக்கு ஒரு புது அனுபவம். ஏதோ டைம் மெஷின் ஏறி பத்து பதினைந்து வருஷம் பின்னாலே போய்ட்ட மாதிரி இருந்தது எனக்கு. மெட்ராஸ்லே அப்பாவோட நண்பர் ஹரி இருந்தார். அவர் வீட்டிலே தங்கி காலேஜ் போய்கொண்டு இருந்தேன்.