டிசம்பர் மாத குளிர் காற்று சில்லென்று வீச மழை வரலாமா வேண்டாமா என்று பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கும் ஒரு ஞாயிற்றுக்கிழமை. நேரம் இரவு 9.30. கதையின் நாயகன் சீனு குளிருக்கு இதமாக வாயில் கோல்ட் கிங்ஸ் புகைந்து கொண்டிருக்க, சத்யம் காம்ப்ளெக்ஸில் மாலைக்காட்சி பார்த்து விட்டு தன் பைக்கை லாவகமாக சிங்காரச் சென்னையின் அண்ணா சாலையில் சென்று கொண்டிருக்கிறான்!