அது ஒரு பிராமண குடும்பம் ரொம்ப ஆச்சாரமானது.அவன் பேர் ஷங்கர் அவனது
சொந்த ஊரே கும்பகோணம் தான்.அன்று அவனது வீடு பூட்டப்பட்டிருந்தது.காரணம்
நாளை மறுதினம் அவனுக்கு சென்னையில் திருமணம்.அவன் சிறுவனாக இருக்கும் போதே
அவனது தந்தை இறந்து விட்டதால் அவன் அம்மா அவனை சிரமப்பட்டு படிக்க
வைத்தாள்.அவனுக்கு படிப்பு தான் ஏறவில்லை என்றாலும் பஜனை(கோவில்களில்
பாடும் பாட்டு) பாடுவதில் அவன் கில்லாடி.அவன் அப்படி பஜனை செய்து
சம்பாரித்து வந்ததில் அவனது குடும்பம் ஏதோ தினமும் மூன்று நேரம் கஞ்சி
குடிக்க முடிந்தது.ஷங்கருக்கு தற்பொழுது வயது 29 என்பதால் அவன் அம்மாவும்
ப்ரோகேரும் பெண் வீட்டாரிடம் பல பொய்களை சொல்லி திருமணம் ஏற்பாடு
செய்திருந்தனர்.