மனதுக்குள் என் ஆசை மன்மதன் காமாவை நினைத்துக் கொண்டேன். தோழி ஒருத்தியைக் காண அவளின் அடுக்குமாடி குடியிருப்புப் பகுதிற்கு வந்தேன். இங்கே எப்போதும் லிப்ட் பிரச்சனையாகவே இருக்கும் என அவள் ஏற்கனவே என்னிடம் சொல்லி இருக்கின்றாள்.3 லிப்டில் ஒன்று மட்டும் தான் வேலை செய்தது. குழுமியிருந்த கூட்டத்தினரிடையே சிக்குண்டு வேர்த்து விறுவிருத்துதான் அவளை போய் பார்க்க வேண்டும் என எனக்கொன்றும் தலை எழுத்தில்லை. ஆதலால், ஆட்டு மந்தையைப் போல் லிப்டின் முன்னாள் அடைத்துக் கொண்டிருந்த கூட்டத்தினருக்கு வழி விட்டு அடுத்த ரவுண்டில் லிப்டில் ஏறலாம் என்றிருந்தேன்.