நான் கல்லூரியில் படிக்கும்போது, ஒரு தடவை என் ஆசைப் பெரியம்மா (என்னுடைய ‘பெரியம்மா காட்டிய சொர்க்கம்’ படிச்சிருந்தீங்கன்னா புரிஞ்சிருக்கும்!), பெரியப்பா, அவர்கள் பிள்ளைகள் எல்லாரும் மதுரைக்கு எங்கள் வீட்டுக்கு விடுமுறைக்கு வந்திருந்தார்கள். என் தம்பி எல்லாரும் தேக்கடி போகலாம் என்றான். சரியென்று ஒரு லொங்கடா வேன் வைத்துக்கொண்டு புறப்பட்டோம்.