திவ்யாவுக்கு குழந்தை பிறந்தது.குழந்தைக்கு பெயர் சூட்டு விழாவும் நடந்தது.பெயர் சூட்டு விழாவில் ஜோசியர் ஜாதகம் எழுத வந்தார்.ஸாதகம் எழுதிய ஜோசியர் குழந்தையின் ஜாதகத்தை எழுதிவிட்டு குழந்தையின் ஜாதகத்தில் சில தோஷங்கள் இருப்பது போல் தெரிகிறது என்று ஒரு குண்டை போட்டார். இதை கேட்ட திவ்யாவுக்கும் அவள் அம்மாவிற்கும் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. திவ்யாவின் குடும்பம் ஜோசியத்தை முழுவதுமாக நம்பி காலத்தை கழிக்கும் குடும்பம். ஒவ்வரு நல்ல செயலும் ஜோசியபடியே செய்வார்கள். திவ்யாவின் அம்மா என்ன தோஷம் குழந்தைக்கு இருக்கு? என்ன பரிகாரம் செய்யணும் என்று ஜோசியரை நோண்டி நோண்டி கேட்டாள் . அதற்கு ஜோசியர் அவளவு விபரமாக எனக்கு புரியவில்லை அம்மா , நானும் எவலோவோ முயற்சி செய்து பார்த்து விட்டேன் ஒன்றும் புலப்பட மாட்டேங்குது . ஆனா எதோ கடுமையான தோஷம் மட்டும் தெரிகிறது. இந்த குடும்பம் நிறைய விபரீதங்கை சந்திக்கும் போல தெரிகிறது. என்று மேலோட்டமாக கூறினார். இப்படி சொன்னால் எப்படி ஜோசியரே இதற்க்கு என்ன தான் வழி என்று திவ்யாவின் அம்மா ஜோசியரை நச்சரிக்க சொல்றேன்மா என்று ஆரம்பித்தார் ஜோசியர்.