ராகுல் எந்திரிடா மணி 4 ஆச்சு, அலாரம் அடிக்குது பாரு. கல்யாணதுக்கு கிளம்பனும்ள” என்று அம்மா எழுப்ப, சரியா அலாரமும் அடிக்க, நான் எழுந்து என் நண்பர்கள் ரமேஷ், சுரேஷ் ரெண்டு பேருக்கும் மெசேஜ் பண்ண அவங்களும் எழுந்தாச்சுனு ரிப்ளை பண்ணுனாங்க. நானும் எழுந்து குளிச்சு முடிச்சு ரெடியாகி,காசு எடுத்துடூ என் தோழி கல்யாணத்துக்கு கிளம்பி பஸ் ஸ் டேண்ட் வர, அவனுகளும் வந்தாங்க. அப்ப ரமேஷ் “ஏண்டா இந்த கல்யாணதீக்கு அவசியம் போகனுமாடா. ஏண்டா மனசன காலங்காத்தால கொல்லறீங்களாடா” என்க, சுரேஷ் அவனிடம் “டேய் ஏண்டா, நம்ம பிரண்ட் மேரேஜ்தானடா, அப்டியே நம்ம பழைய நண்பர்களையும் பாக்கலாம்டா. எல்லாரையும் பாத்து எவ்வளவு நாளாச்சு” என்க ரமேஷ் சரினுட்டு பஸ்ஸில் சீட்டு போட, நாங்க கிளம்பினோம்.