இப்போ தூக்குடா தூக்கிட்டு போய் தாக்குடா!

அன்னைக்கு ஆறுதல் சொல்லத்தான் ராதா வீட்டுக்கு அதிகாலையில் சென்றேன். முந்தின நாள் இரவே அவள் வீட்டில் நடந்த கதையை என்னிடம் போனில் சொல்லி அழுதாலும் அந்த நேரத்தில் நான் அவள் வீட்டுக்கு போய் கதவை தட்டினால் அது சரியாக இருக்காது. மேலும் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் அவள் வீட்டில் சண்டை நடைபெற்றதை அறிந்து அடுத்து நடக்க போகும் விஷயங்களை ஆர்வத்தோடு பார்த்து மகிழ நினைப்பார்கள்.