அவனுக்காக பல பொய்களை சொல்லி நான் வாதாடினாலும் ஆனா அவன் கண்ணுல நான் எப்போதும் உண்மையத்தான் நான் பார்த்தேன். இன்றைய சினிமா கதாநாயகன் போல அவனும் தாடி வச்ச ரஃப் அன்ட் டஃப் ஹீரோ தான். பார்த்த உடனே பிடிச்சுப் போகும். நியாயத்தை தட்டி கேட்கிற ஆன்டி ஹீரோ போலத்தான் அவனும். அவனோட கேஸ்ல ஒண்ணு கூட அவனுக்காக நான் வாதாடினது இல்ல. எல்லாமே அவன் சுயநலம் பார்க்காம பொதுநலத்தோடு மத்தவங்களுக்கு உதவப்போயி தான் சட்டத்தை மீறினதுக்காக உள்ளே போயிருக்கான்.