தேங்காய்க்கு ஆசைபட்டு கைக்கு எட்டுற மாம்பழத்தை மறந்துடாதீங்க!!

நான் ஒரு மொத்தவிலை கடையில வேலை பாக்குறேன். 13 வயசுல வேலைக்கு சேர்ந்து இப்போது 6 வருஷமா அதே கடையில நியாயமாவும், நேர்மையாவும் வேலை பாக்குறதுனால முதலாளி என்னை நல்லவிதமா பாத்துக்கிறாரு. அதுக்கு காரணம் முதலாளி அம்மா தான். வீட்டுல உதவிக்கு ஆள் தேவைபடும்போதெல்லாம் முருகனை வரச்சொல்லுங்கனு கடைக்கு போன் போட்றுவாங்க. நானும் அவங்க கூப்பிட்ட உடனே முதல் ஆளா போய் நிப்பேன்.