நான் பத்தாவது படிக்கும்போது அண்ணா பிளஸ் 1 படிச்சிட்டு இருந்தான். அதுக்கு முன்னாடி நிறைய சின்ன சின்ன சண்டைகள் போட்டுகிட்டாலும் அந்த வயசுல கொஞ்சம் மெச்சூரிட்டி வந்த பின்னாடி ஒரு விஷயத்துல ரெண்டு பேருக்கும் ஒற்றுமை இருந்துச்சு. அது மெலடி சாங்க்ஸ் கேட்குறதுல தான். எங்க ஆர்வத்தை பாத்து டாடி ஒரு ஐபாடை எங்களுக்கு வாங்கி கொடுத்து ஷேர் பண்ணி கேளுங்கனு சொன்னாரு. அதுக்கப்புறம் தான் ரெண்டு பேருமே சேர்ந்து ஐபாட்ல மெலடி சாங்ஸை கேட்க ஆரம்பித்தோம்.