எங்கள் குடும்பத்தில் என் அம்மா, அப்பா, என் தம்பி மற்றும் நான் மட்டுமே. நாங்கள் புதுவையில் பல நாட்களாய் வசித்து வந்தோம்…என் அத்தை, என் அப்பாவின் உடன் பிறந்த தங்கை, அவள் திருமணத்திற்கு முன்பு சென்னையில் இருந்தவள். திருமணம் ஆன பிறகு, தன் கணவன் வீட்டிற்கு, புதுவைக்கு இடம் பெயர்ந்தாள். எங்கள் வீட்டிலிருந்து என் அத்தை வீடு வெகு தொலைவில் இல்லை…நடந்து சென்றால் பதினைந்து நிமிடத்திற்கு மேல் ஆகாது…