அப்பாவின் பெட்ரூமில் இருந்து பெரிதாக சத்தம் வந்து கொண்டு இருந்தது. அப்பா குடித்துவிட்டு வந்திருக்கிறார்.
அப்பா இப்படிதான். வாரம் ஒரு நாள் எங்காவது சென்று குடித்துவிட்டு வந்து விடுவார். அப்பா குடித்துவிட்டு வரும் நாட்களில் எல்லாம் அம்மா இப்படிதான் சண்டை போடுவாள். அம்மாவையும் சும்மா சொல்லக் கூடாது. ஜாடிக்கேத்த மூடி. புருஷன்தானே என்று சற்று பொறுத்து போக மாட்டாள். அப்பாவோடு பதிலுக்கு மல்லு கட்டுவாள். கெட்ட வார்த்தைகளில் அப்பாவை திட்டுவாள். இருவரும் வீட்டில் வயதுக்கு வந்த ஒரு மகள் இருக்கிறாள் என்பதையே மறந்து விடுவார்கள். என் உணர்ச்சிகளை புரிந்துகொள்ள மாட்டார்கள். நான் என் போர்வையால் என் முகம் வரை மூடிக் கொண்டு கால்களை சுருக்கிக் கொண்டேன். தூக்கம் வரவில்லை.