அப்பா வேற ஊர்ல இல்லை சீக்கிரமா வாடா கண்ணா!

நல்லவேளையாய் போயிற்று. கடைசி நொடியில் அந்த ஆட்டோ என் மேல் இடித்துவிடுவதை தவிர்த்தேன். கொஞ்சம் அசந்து இருந்தால் என்ன ஆகியிருக்கும்? படாரென்று அந்த ஆட்டோ என் மேல் மோதியிருக்கும். அருகில் ஒரு போஸ்ட் கம்பம் வேறு. ஆட்டோ இடித்த வேகத்தில் அதன் மேல் மோதியிருந்தால்? நினைத்து பார்க்கவே எனக்கு நடுக்கமாய் இருந்தது. நான் அந்த நடுக்கத்தில் இருந்து மீண்டு சுதாரித்துக் கொண்டேன். ஓடிச்சென்று கிளம்பிக்கொண்டு இருந்த பஸ்ஸின் படிக்கட்டில் தொற்றிக் கொண்டேன். டிக்கெட் எடுத்துவிட்டு நகர்ந்து உள்ளே சென்றேன். இன்னும் என் படபடப்பு குறையவில்லை.