சில வருடங்களுக்கு முன்பு அந்த ஃபாக்டரியில் வேலை பார்க்கும் சூப்பர்வைசரைத்தான் அக்காவுக்கு திருமணம் செய்து கொடுத்தோம். திருமணம் செய்த ஆறு மாதத்தில் அன்த ஃபாக்டரியில் ஏற்பட்ட ஒரு விபத்தில் அக்காவின் கணவர் இறந்து போனார். அப்போது அவருக்கு ஃபாக்டரி நிர்வாகம் பெரிய. தொகையை நஷ்ட ஈடாக கொடுக்க வந்த போது என் அக்கா, அதை மறுத்து நிரந்தர வருமானத்திற்கு வழி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார். என் வீட்டிலும், அக்கா கணவர் வீட்டில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.