நான் ஒரு டைவர்ஸி. பேரு ஹேமா. ஒரு தனியார் நிறுவனத்தில் பெரிய பொறுப்பில் இருக்கிறேன். நகரத்தில் தனியாக வாழ்ந்தாலும் என் மனம் போன வாழ்க்கை என்பதால் எந்த குறையும் இல்லை. என் சம்பாத்தியம், என் வாழ்க்கை, என் சுக துக்கம் என்பது போல் தான் என் பயணம் போய் கொண்டு இருக்கிறது. திருமணத்தில் நடந்த கசப்பான அனுபவங்களுக்கு பிறகு வீட்டில் மறுமணம் என்ற பேச்சு ஆரம்பமாகியது. மேலும் அனுபதாமும், பரிதாபமும் என்னை சுற்றி சுற்றி வர அதிலிருந்து தப்பித்து சுதந்திரமாக வாழத்தான் என் பெற்றோர், ஊர் உறவினர்களை விட்டு ரொம்ப தூரம் ஒதுங்கி, நகரத்தில் என் வேலையை மாற்றி கொண்டு தனியாக வாழ்கிறேன்.