விடுமுறைக்கு ஊருக்கு வந்த போது உறவினர் வீட்டு திருமணம் உள்ளூரில் நடக்க இருக்கிறது. ஆனால் அப்பாவும் அம்மாவும் என்னை கண்டிப்பாக கல்யாணத்தில் கலந்து கொள்ளும்படி சொல்லி விட்டு காசிக்கு கிளம்பி சென்று விட்டார்கள். பெரும்பாலும் உறவினர்கள் கூட்டத்திற்குள் செல்ல விரும்பாதவன். ஆனால் அப்பா பெருதன்மையாக என்னை டூருக்கு கட்டாய படுத்தாததால் நான் கல்யாணத்தில் கலந்து கொள்வதாக வாக்குறுதி கூறி அவர்களை அனுப்பி வைத்தேன்.