அக்காவைப் பத்தி தப்பா நினைச்சுக்கிட்டு, தப்புச் செய்யறவனுக்கு, அம்மாகிட்டே என்ன கூச்சம்?

ஜாம்பஜாரிலிருந்த தனது மேன்சனுக்குள் ஜமால் நுழைந்த சில நிமிடங்களில் அவனது செல்போன் அடித்தது. ஜரீனா அக்கா! அடடா, ஐந்நூறு ரூபாய் கேட்டிருந்தாளே?