அக்கா சுகன்யா என்னை விட இரண்டு வயது மூத்தவள் தான். இரண்டு பேரும் சகோதரிகள் என்று சொல்வதை விட எலியும் பூனையுமாக சண்டை போட்டுக் கொண்டு வீட்டை ரணகளம் ஆக்குபவர்கள். எங்களை சமாதானப்படுத்துவது தினமும் அம்மாவின் முக்கிய வேலையாக இருக்கும். அம்மா இல்லாத போது அதிரடி ஆக்சன் ஹீரோயின்களைப் போல் அடித்துக் கொண்டாலும் அம்மாவை கண்டு விட்டால் அழுது சீன் போட்டு என் மேல தப்பே இல்லைம்மா என்கிற ரேஞ்சுக்கு ஆஸ்கார் நாயகிகள் ஆக மாறி விடுவோம்.