தனி ஆளுக்கு வாடகைக்கு வீடு எடுப்பதென்றால் சரியான கஸ்டம் தான். ஒருவாறாக பத்திரிகை ஒன்றில் விளம்பரம் பார்த்து ஒரு வீட்டின் மேல் மாடியை வாடகைக்கு எடுத்து ஒரு வாரத்தில் ஒரு மாதிரியாக அங்கே செட்டில் ஆகினேன். கீழ் மாடியில் வீட்டின் ஓனரும் அவனது மனைவியும் அவர்களது ஒரு வயதுக் குழந்தையும் ஓனரின் அம்மாவும் வசித்து வந்தார்கள். புதிய டெனன்ட் எப்பதால் நல்ல பிள்ளைபோல ஆபீஸ் முடிந்ததும் நேராக வீடு வந்து விடுவேன். ஒரு தண்ணி கிண்ணி கூட வாயில் வைத்ததே இல்லை. நான் ஒரு பிரச்சனையும் கொடுக்காமல் இருந்து வந்ததால் என் மீது ஒரு நல்ல அபிப்பிராயம் இருந்து வந்தது.அதே வேளை வீட்டின் ஓனருக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்தது. அவரது குடும்பத்தையும் அவருடன் கூட்டி செல்ல விசா கிடைக்கவில்லை. அதனால் சோகத்தோடு அந்த மனிதர் அமெரிக்கா கிளம்பினார்.