நட்பு காமத்திற்கு எதிரியோ? 

tamilsexstories கழுகு கண், கழுகு காது எனக்கு!

அந்த பஸ்ஸில் நடக்கும் எல்லாம் நிகழ்வுகளும் எனக்கு நன்றாகவே புலப்பட்டது. வாடிக்கையாக நான் ஆஃபீஸுக்கு கிளம்பும் பஸ் இது. எப்போதும் வழிந்து கொண்டு சாய்ந்து ஓடும் பஸ் இது. இன்றும் அது போலவே! கிசிகிசுப்பான சத்தம், கூச்சல், உரக்க பேசும் கர்ணகடுரமான சத்தம், இடை இடையே ரீங்காரமிட்டு பாடும் செல் போன்கள், வழிய வழிய புத்தகங்களை வழிய விடும் புத்தக கோணிகளை தூக்க முடியாமால் தூக்கும் குழந்தைகள், இதில் கோணிகள், கூடைகள் வைத்திருக்கும் காய்கறி பெண்கள் “நாங்கள் இல்லாமல் உங்களால் ஒரு நாள் இருக்க முடியுமா?” என்று சவால் விட்டு கூடைகளை பஸ்ஸுக்கு நடுவே பரப்பிக்கொள்ள, மற்றவர்கள் இவர்களுக்கு பயந்துக்கொண்டு (குரல் கொடுத்தால் பீஸ் பீஸாக்கி விடுவார்கள்! பரம்பரை மானம் கப்பல் ஏறும்!) ஒருவர் கால் மேல் ஒருவர் நிற்க, நெருக்கத்தின் ஒருவர் விடும் மூச்சை மற்றவர் வாங்கிக்கொண்டு…! ஆனால் இதை எல்லாம் மீறி என் கண்கள் அந்த பஸ்ஸின் எனக்கு சற்று 45 டிகிரியில் அமர்ந்து இருக்கும் அந்த காலேஜ் பையனையே பார்த்துக்கொண்டு இருந்தது.

Read More
  • என் அக்கா பார்க்க திரிஷா மாதிரி இருப்பா
  • சொர்கத்தை பார்த்தது பொல இருந்தது
  • அவளுக்கு என் மீது சற்று கோபம்

சற்றே நீண்ட சாந்தமான முகம், அமைதியான கருணை பொங்கும் கண்கள், அடர்த்தியான கிராப்பை சற்றே முன்னால் விட்டு அடிக்கடி தன் விரலால் பின்னால் தள்ளிக்கொள்ளூம் அழகு! பரவசமூட்டியது. நீல நிறம் ஜீன்ஸ், மஞ்சள் டீ ஷர்ட், மேலே இரண்டு பொத்தான்களை கழட்டி விட்டு இருக்க அவன் மார்பின் ரோமங்கள் நன்றாக தெரிந்தது! அந்த ரோமக்காடுகளில் பளீர் என்று பளபளத்த தங்க செயின். பையன் நல்ல சிவந்த நிறத்தில் நன்றாக சினிமா ஹீரோக்களுக்கு சவால் விடும் பாங்கில் இருந்தான். முகம் நல்ல தேக்கு நிறம். ஒரு பரு, ஒரு பள்ளம் ஊஹும் வழ வழ முகம். அவன் மோவாயில் ஒரு சின்னக்குழி. உடனே தொட்டு பார்க்க வேண்டும் போல கை பரபரத்தது. ரோஸ் நிறத்தில் அவன் ஆட்காட்டி விரல்கள் இருந்தது. பார்த்தால் லேசாக தொட்டுபார்க்க வேண்டும் போல இருந்தது. வசீகரமான இளைஞன்.

“ரொம்ப திமிருடி எனக்கு” என்று யாரோ என் காதில் சொன்னது போல இருந்தது. சொன்னது வேறு யாரும் இல்லை. என் மனம்தான்.

“ரெண்டு பையனை பெத்துட்டு ஒரு சின்ன பையனை சைட் அடிக்கறயா?” என்று சற்று செல்லமாகவே திட்டியது. பாவம் அதற்கும் அந்த பையன் மேல் ஒரு கிக்குதான் போலிருக்கு. ஆனால் அது சொன்னதில் உண்மை இருக்கிறது. நான் கலா. சென்னையில் ஒரு பாடாவதி கம்பெனியில் எழுத்தர் வேலை செய்து வருகிறேன். வயது 40. வளர்ந்த 10, 8 படிக்கும் பையன்கள் இருக்கிறார்கள். என் கணவர் ஒரு மளிகை கடையில் இருக்கிறார்.

ஆண்டவன் என்னை நன்றாகவே பழி வாங்கி விட்டான். படிக்கும்போது எனக்கு தமிழ் கதைகள் பிடிக்கும், கவிதை பிடிக்கும், மழையில் நனைய பிடிக்கும். ஆனால் திருமணமாகி கணவர் வீட்டுக்கு வந்தவுடன் பெய்த முதல் மழையில் நனையும்போது “ஜுரம் வரும்!” என்று கடினமாக அவர் சொன்ன போதே எனக்கு தெரிந்து விட்டது என் பழைய வாழ்க்கை காணாமல் போய் விட்டது என்று! எல்லாம் வீணாகி விட்டது.

“அரபிக்குதிரை மாதிரி இருக்காடா!” என்று என் கல்லூரி நண்பர்கள் என்னை கிண்டல் செய்வது வழக்கம்!

காரணம் நான் நல்ல உயரம்! 6 அடி இருப்பேன். சற்றே புஷ்டியான உடம்பு! “எந்த கடையில் அரிசி வாங்கறே!” என்று என் தோழி அடிக்கடி கிண்டல் அடிப்பாள். மதர்ந்த மார்பகம் (” கலா மாரை பார்த்தா எனக்கு பயமாயிருக்கு!” என்று என் அம்மா பயப்பட்டது ஞாபகம் வந்தது), பிட்டத்தை தொடும் பின்னல் (“என்னமா முடி இருக்கு!” என்று என் பக்கத்து வீட்டு மாமி அலுத்துக்கொண்டது ஞாபகம் வந்தது!), பின்னழகுகள் (“கலா உள்ளே போம்மா?”) என்று என்னை அனுப்பி விட்டு அப்பா “காலம் கெட்டு இருக்கு! ரங்கபாஷ்யத்திற்கு வயது 50. எப்படி வெறிச்சி பார்க்கறான் 16 வயது பெண்ணை. எல்லாம் கலிக்காலம்” என்று அப்பா அங்கலாய்ந்தது ஞாபகம் வந்தது. எல்லா கனவும் குள்ளமான, குண்டான, மளிகை கடையில் வேலை பார்க்கும் ராமுக்கு திருமணம் செய்ததும் எல்லா சந்தோஷங்களும் முடிவுக்கு வந்தது.

மீண்டும் திரும்பி அந்த பையனை பார்த்தேன்.

என்னையே உற்று உற்று பார்த்துக்கொண்டு இருந்தான்.

ஒரு மாதமாகவே பார்க்கிறேன். நான் எந்த பஸ்ஸில் ஏறுகிறேனோ (வேண்டுமென்றே பஸ் மாற்றி பார்த்து விட்டேன்!) அதே பஸ்ஸில் ஏறுகிறான். நான் எங்கே அமர்கிறேனோ அதற்கு பக்கத்து இடத்தில் அமர பார்ப்பான், இல்லை அருகே நின்றுக்கொண்டே என்னை வேடிக்கை பார்ப்பான். ஆனால் என்ன அவன் ஒரு வெஜிடேரியன் வகை! தீண்டி பார்ப்பது, காலை விட்டு ஆட்டுவது, இடுப்பை பிடிப்பது என்றேல்லாம் கிடையாது. அமைதியாக அருகே உட்கார்ந்து பார்வையாலே “உன்னை எனக்கு பிடிக்கிறது! என்னை தடை செய்ய முடியுமா?” என்பது போல ஒரு பார்வை. இதை எப்படி என்னால் குறை சொல்ல முடியும்.

என் கையில் இருக்கும் ஒரு புத்தகத்தை எடுத்து பார்த்தேன். கதையிலும் ஒரு நாயகி

“கொஞ்ச நாளாக அழகான இளைஞர்களை பார்க்கிறபோதெல்லாம் பனி நீரில் கால் வைத்த சிலிர்ப்பு மனசெல்லாம் பரவுகிறதே, இதுதான் பருவ சலனமா? கனவுகளில் அடிக்கடி முத்தமிடப்படுகிறேன்! கட்டி அணைக்கப்படிகிறேன். என் கனவு நாயகா..நீ யாரடா?”

கையிலிருந்த புத்தகத்தை கையில் வைத்தேன். என் மனதில் ஓடிக்கொண்டு இருக்கும் அதே எண்ணங்களை வடித்திருப்பது போல உணர்ந்தேன். மெல்ல சோம்பல் முறித்தேன். இப்படி படிப்பது சுவாரசியமான விஷயம். சிரிக்கலாம். கண்ணை மூடிக்கொண்டு யோசிக்கலாம். மனக்கண்ணில் அந்த வரிகளை ஓட விடலாம். ஏன்? மனதில் ரகசியமாக ஒரு டூயட் கூட போடலாம்.

என் மனதும் இப்படி அந்த பையனை (ஆம் – அவன் பெயர் என்ன?) – முகம் தெரியாத, பெயர் தெரியாத அந்த பையனின் முகத்தை பார்த்தால் அப்படித்தான் இருக்கிறது. அவனை பார்த்தால் அப்படித்தான் பனி நீரில் கால் வைத்த மாதிரி ஒரு சிலிர்ப்பு என் மனதெல்லாம் பரவுகிறது. இதுதான் பருவ சலனமா? என் மனக்கண்ணில் நான் அவனை கட்டி பிடிக்கிறேன். ஆஹ்ஹ்ஹ்ஹ் அவன் மென்மையாக என் கன்னத்தில் முத்தம் வைப்பது போல இருக்கிறதே! என் கனவு நாயகா! யாரடா நீ! திடுக்கிட்டு பார்த்தால் பஸ் போய்க்கொண்டு இருக்கிறது. ஓ! எல்லாம் கனவா? நான் திரும்பி பார்க்கிறேன். இன்னமும் என்னை உற்று பார்த்துக்கொண்டு இருந்தான்.

மீண்டும் புத்தகத்தை திறந்து பார்த்தேன்.

“கண்ணனின் கருமையை ரசிக்கும் கண்கள், மேகத்தின் கறுமையை பார்த்து ரசிக்கும் கண்கள் ஏன் என் கறுமையை ரசிப்பதில்லை, ஏன் என்னை போல மழையில் நனைய விரும்புவதில்லை. எதிர்க்கே மழை பெய்ய ஆரம்பித்ததும் ஒடி வந்து குழந்தையை இழுக்கும் கோமதியை பார்த்ததும் சிரிப்பு வந்தது. ஏன் ரசனையே இல்லாமல் இருக்கிறார்கள். மழையில் நனைவது எவ்வளவு சந்தோஷமான விஷயம் தெரியுமா?”

ஓ! இது விரகதாபமோ? நான் ஒன்றும் கறுமையில்லையே! இந்த நாவல் கோமதியை விட நான் அழகானவளே! மழையில் நனைவது சந்தோஷமே! ஆனால் ஏன் அந்த பையன் என்னை நெருங்க மாட்டேங்கறான். சட்!

அப்போது என் ஸீட் பக்கத்தில் ஒரு ஸீட் காலியானது.

100 மீட்டர் ரேஸ் போல அவன் வேகமாக வந்து அமர்ந்தான். என்னமோ ஒரு செண்டை போட்டிருந்தான். மெல்லிய மணம். அந்த செண்ட் மணம், ஏதோ ஒரு ஆஃடர் லோஷன், எல்லாம் அவன் ஆண் மணத்தோடு சேர்ந்து மெல்ல போதையை கிளப்பியது. ச்சீய் இப்படி ஓப்பனா ரசிக்கிறேனே! என்று மனம் லேசாக வெட்கமடைந்தது! வந்தவன் என்னை நோக்கி பேச தயங்குவது போல இருந்தது. பேசடா? என்று மனம் துடித்தது.

அப்போதுதான் “டிக்கெட், டிக்கெட்” என்று கடுரமாக கத்திக்கொண்டு மனித வெள்ளாத்தை தாண்டி பஸ் கண்டக்டர் வந்தார்.

பர்ஸை திறந்தேன். மனம் அதிருந்தது! ஒரே ஒரு 500 ரூபாய் இருந்தது. மனம் தட தடவென்று அடித்துக்கொண்டது. வட பழனியில் இருந்து திருவான்மையூருக்கு 500 ரூபாய் கொடுத்தால் கண்டக்டர்கள் மானத்தை வாங்கி விடுவார்கள். “5 ரூபாய் டிக்கெட்டுக்கு 500 ரூபாயா? தோ இறங்குமா!”. சில சமயம் அவர்கள் மூடு சரியில்லை என்றால் பரம்பரையையே இழுத்து மானம் வாங்குவார்கள். அவர்களும் பாவம்தான்! தினமும் இப்படி மனைத வெள்ளத்தில் மிதந்தால் அவர்களும் என்ன செய்வார்கள் பாவம்!

என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தேன்.

என்னை பார்த்ததும் அவன் புரிந்துக்கொண்டான்.

“அவங்ளையும் சேர்த்து ரெண்டு திருவான்மையூர்” என்று டிக்கெட் வாங்கினான். அட! இவன் பார்வைக்கு என்ன போதை இருக்கிறது! இவன் வா! என்றால் அவனை அழைத்துக்கொண்டு போய் என் உடைகளை களைய சொல்வேன்! ஆ! என்ன ஒரு கண்கள்? என்ன புருவம்? என்ன இமை? உதடுகள்? அவன் உதடுகள் லேசாக பிளந்திருக்க அந்த பிளவில் அவன் ஆரோக்கியமான பற்கள்!

கண்டக்டர் நகர்ந்த உடனே அவனிடம் சாய்ந்து “தாங்க்ஸ்” என்றேன்.

“நான் இந்த பணத்தை” என்று இழுத்தேன்!

‘ஐந்து ரூபாய்க்கு புரோநோட்டா தரப்போறீங்க. விட்டுத்தள்ளுங்க” என்று ரம்யமாய் சிரித்தான்.

“இல்லை! நான் இந்த டிக்கட் சார்ஜை தந்தே ஆகணும்” என்றேன்.

“இட்ஸ் ஓகே! நீங்க தந்தே ஆகனும்னா அப்புறம் வாங்கிக்கறேனே?” என்றான்.

அழகு மட்டும் இல்லை. பண்பும் இருக்கிறது.

“நான் ஒண்ணு சொன்னா தப்பா நினைக்க மாட்டீங்களே?”

“என்ன?”

“உங்களை பார்க்க எனக்கு மனம் இதமா இருக்கு! அதான் உங்களை வலுக்கட்டாயமா ஒரு மாதமா உங்க பின்னாடி வறேன்! தப்பா நினைக்காதீங்க”

“சீச்சீ! நான் ஏன் தப்பா நினைக்கிறேன்!”. இவன் மனதில் பட்டதை அப்படியே சொல்லி விட்டான். நான் கூடத்தான் இவனை ரசித்தேன். இவன் மார்பின் முடிகளை ரசித்தேன். இவன் மணத்தை ரசித்தேன். இப்போது அவன் வெளிப்படையாக அவன் பேசியதால் ஏன் அவன் பேரில் கோபம் கொள்ள வேண்டும்! அவன் கன்னத்தை பிடித்து அப்படியே கிள்ள வேண்டும் என்று தோன்றியது!

“தப்பா நினைக்கலேன்னா உங்க பேர் சொல்ல முடியுமா?” என்றான்.

“கலா” என்றேன் வெட்கத்துடன்.

“மிஸ் கலா” என்றான்.

அவன் அந்த மிஸ்ஸை உச்சரித்தபோதே எனக்கு உடலில் மின்சாரம் அடித்த மாதிரி இருந்தது. கிளுகிளுவென்று மகிழ்ச்சியாக இருந்தது. வளர்ந்த இரண்டு மகன்களுக்கு அம்மாவான என்னை பார்த்து “மிஸ்” என்றதால் உடனே அவனை விரும்பினேன். அவன் கண்களுக்கு அவ்வளவு இளமையாகவா தென்படுகிறேன்?

“உங்ககிட்டே ஒரு உதவி கேட்கணும்”

என்ன வேண்டுமானாலும் கேள்! என மனது சந்தோஷமடைந்தது.

“உங்களை பார்க்க காலமான என் இறந்து போன அக்கா ஞாபகம் வருது! என் கல்யாணம் வரும் புதன் கிழமை. எனக்குன்னு யாரும் இல்லை. நீங்க அவசியம் வரணும். உங்ககிட்டே பேச இப்பதான் வாய்ப்பும், தைரியமும் வந்தது. அவசியம் வரணும் அக்கா! என்றான்.

அக்காவா!?

ஒரு வேளை நட்பும் காமத்திற்கு எதிரியோ?

முற்றும்